Wednesday, 5 September 2012

ஏன் ஒரு கோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?



நல்ல கேள்வி!!! உங்களிடம் மூன்று கோடி ரூபாய்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்;அதைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்?

நிச்சயமாக நாம் எதையெல்லாம் நீண்டநாட்களாக விரும்பினோமோ அதை அனுபவித்துவிடுவோம்;இன்றுதான் நமது நாட்டிலேயே விலை உயர்ந்த கார்கள்,விலைமதிப்பற்ற நகைகள்,ஆடம்பரமான வீடுகள் என எல்லாமே கிடைக்கின்றன.
ஒரு முறை எனது ஆஸ்தான ஜோதிடர் ஒருவரிடம் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்டேன்:

அண்ணே,உங்களிடம் ஒரு கோடி ரூபாய் தந்து அதை ஒரே நாளில் செலவழிக்கணும்னு நான் சொன்னா நீங்க என்ன செய்வீங்க?

அவர் மனதுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.அந்த  சிரிப்பின் ஒரு பகுதி அவரது புன்னகையாக வெளிவந்தது.

சொல்லுங்க; என்று அவரை வற்புறுத்தினேன்.

டெல்லியில் ஒரு ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் நிறுவனம் இருக்குது;அங்கே ஒரு நாள் வாடகை அம்பது லட்சம் ரூபாய்! அதை நம்ம ஊருக்கு வரச் சொல்லுவேன்;மீதியை எப்படிச் செலவழிப்பேன்னு உனக்குத் தான் தெரியுமே?
என அவர் படபடவென சொல்லி முடித்ததும்,நாங்கள் இருவருமே சிரித்தோம்;அந்த சிரிப்பு சிரித்து முடிய சில நிமிடங்கள் ஆனது.

இன்று நமது நாடு இருக்கும் நிலையில் சாதாரணக் குடும்பங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதே பெரிய சாதனையாக மாறிவிட்டன;ஏனெனில்,தினம் தோறும் விலைவாசி ஏறுகிறது;ஆனால்,சம்பளம் மட்டும் வருடத்துக்கு ஒருமுறைதான் உயருகிறது.எப்படி காலம் தள்ளுவது?



தனிமனிதனின் நிலை உயர்த்தப்பட்டால்,அவனது உயர்வு அவன் பணிபுரியும் நிறுவனம் மற்றும் அமைப்பின் நிலையை உயர்த்திவிடும்.அந்த நிறுவனங்களின் நிலை உயர்ந்தால்,அதன் தொடர் விளைவாக ஒரு நாட்டின் நிலையும் உயர்ந்துவிடும்.எனவே,அடிப்படையில் ஒவ்வொரு தனிமனிதனையும் முன்னேற்றுவதே நமது இறைசேவை ஆகும்.ஆனால்,இன்று இலவசமாக இப்படிப்பட்ட முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஆன்மீக அமைப்புகளைத் தேட வேண்டியிருக்கிறது.அதற்கு தகுந்தாற்போல நமது நாட்டையும் முதலாளித்துவ நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.இதனால்,பணம் இருப்பவர்களிடம் மேலும் மேலும் பெருமளவு பணம் குவிந்துகொண்டிருக்கிறது;பணம் இல்லாதவர்கள் தினசரி வாழ்க்கை வாழ்வதே சாதனையாகிக்கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில் இருப்பவன்,இல்லாதவன் இந்த இருவருக்குமிடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் சக்தி ஓம்சிவசிவஓம் ஜபிப்பதாலும்,ஜபிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாலும் உருவாகிவருகிறது.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழுகோடியே ஐம்பது லட்சம் பேர்கள் ஆகும்.தமிழ்நாட்டுக்கு வெளியே சுமார் மூன்று கோடித்தமிழர்கள் இந்தியாவெங்கும் மற்றும் உலக நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களில் பத்தில் ஒருவருக்கு ஓம்சிவசிவஓம் எப்படி ஜபிப்பது? என்ற வழிமுறை சென்றடைய வேண்டும் என ஆன்மீகக்கடல் விரும்புகிறது.இந்த மகத்தான தெய்வீகம் சார்ந்த தேசசேவையில் நீங்களும் பங்கேற்கலாம்;எப்படித் தெரியுமா?


ஆயிரம் நோட்டீஸ் அச்சடித்து ஆன்மீகக்கடலுக்கு அனுப்பி வைக்கலாம்;ஆயிரம் நோட்டீஸிக்கு ரூ.450/-தான் ஆகிறது.அக்டோபர் 2012 வது மாதத்தில் இரண்டு சனிப்பிரதோஷங்கள் வர இருக்கிறது.இந்த நாட்களில் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ்களை விநியோகிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்;(ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள் குறைந்தது  5000 அச்சடித்து எமக்கு அனுப்புவது நல்லது)


அல்லது


நீங்களே அச்சடித்து உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸை விநியோகிக்கலாம்;இதன் மூலமாக உங்களால் உங்களுடைய ஊரில் ஒருசிலராவது ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்பார்கள்;அவர்கள் அவ்வாறு ஜபிப்பதற்கு நீங்கள் காரணமாக இருக்கப்போவதால்,அவர்களின் ஜபத்தின் பலன்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் உங்களை வந்து சேரும்.இதன் மூலமாக உங்களுடைய மன உளைச்சலும்,பிரச்னைகளும் தீர்ந்துவிடும் அல்லது தீர்ந்துவிடுமளவுக்கு நீங்கள் சக்தி வாய்ந்தவராக மாறிவிடுவீர்கள்.கடந்த காலங்களில்  பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு இதுதான் நிகழ்ந்திருக்கிறது.


அல்லது


எம்மோடு அக்டோபர் 2012 இல் வரும் சனிப்பிரதோஷங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் விநியோகிக்க வரலாம்;எங்கே என்பதை அறிய செல் எண்,போட்டோவுடன் மெயில் அனுப்பவும்;


அல்லது


இணையம் வழியாக ஓம்சிவசிவஓம் வலைப்பூவையும்,நோட்டீஸையும் பரப்பலாம்; groups, Facebook, google+,  free image hosting webs மற்றும் உங்களுடைய blogspots,wordpresses,google webpages,freewebs மூலமாக பரப்பலாம்.இப்படி இந்த வருடம் முழுவதும் பரப்புவது அவசியம் மற்றும் அவசரம் ஆகும்.ஏனெனில்,இதன் மூலமாக வர இருக்கும் அழிவுகளை பெருமளவு குறைக்க முடியும்.


நீங்கள் ஒரு நாளுக்கு 30 நிமிடம் வீதம் சுமார் 100 நாட்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தீர்கள் எனில்,மேலே கூறிய அத்தனை விதமான வழிமுறைகளையும் நீங்களே நடைமுறைப்படுத்தத் துவங்குவீர்கள்.

ஒரு புள்ளிவிபரப்படி,சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை நெருங்கிவிட்டது;கோயம்புத்தூரின் மக்கள் தொகை பதினேழு லட்சம் ஆகும்.தவிர ,தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத்தொகுதிகள் இருக்கின்றன.இதுவரையிலும் சுமார் 25 நகரங்களில் இருக்கும் 30 சிவாலயங்களில் தான் ஓம்சிவசிவஓம் விநியோகம் ஆகியிருக்கிறது.இது போதவே போதாது;வாருங்கள்! கை கொடுங்கள்!! நமது ஆன்மீக சக்தியை அதிகரிப்போம்;நமது நாட்டின் பொருளாதாரத்தை ஆன்மீக வழியில் வலுப்படுத்துவோம்;இந்த உலகத்தின் ஒரே வல்லரசாக மாற்ற முயலுவோம்;


ஓம்சிவசிவஓம்


 Thanks to 

http://www.aanmigakkadal.com/2012/09/blog-post_5.html

Tuesday, 3 April 2012

இந்தியாவைக் காப்போம்;இன்னும் பலரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைப்போம்!!!



பெருங்கடலைக் கொண்ட மதம்,2010க்குப்பிறகு உலகை ஆளும்; என்பது பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் நார்ஸ்டர் டாமஸின் வாக்கு ஆகும்.அதற்கான நிகழ்வுகள் நிறைய தற்போது நிகழ்ந்துவருகின்றன.இருப்பினும்,நமது தமிழ்நாட்டிலும் உலகமெங்கும் தனி மனிதன்,குடும்பம் போன்றவைகள் பலவிதமான பொருளாதார கஷ்டங்களுக்கு உள்ளாகிவருகின்றன.
இந்த நிலையை மாற்றிட நாம் செய்ய வேண்டியது இரண்டு காரியங்கள் ஆகும்.
முதலாவதாக நாம் ஒவ்வொருவரும் தினமும் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க வேண்டும்.
இரண்டாவதாக இந்த வருடம் முழுவதும் எப்படி ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும் என்ற துண்டுப்பிரசுரத்தை நமது ஊரில் பரவச் செய்ய வேண்டும்.
ஏனெனில்,நேர்மையாக வாழ்ந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் அனைவருமே மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகிவருகின்றனர்;அப்படிப் பட்டவர்களுக்கு இந்த துண்டறிக்கை விரைவாகச் சென்றடைய வேண்டும்.

நடைமுறையில் நேர்மையாளர்களைப் போல நடிப்பவர்கள் நல்லது கெட்டதுகளை சுலபமாக அடையாளம் கண்டுகொண்டு தன்னை காப்பாற்றிக்கொள்கின்றனர்.நிஜமாகவே நேர்மையாக இருப்பவர்கள் தனது வட்டத்தை விட்டு வெளிவருவதில்லை;எனவே,வழக்கமான ஓம்சிவசிவஓம் துண்டறிக்கையை இன்னும் எளிமையாக்கியிருக்கிறோம்.இந்த துண்டறிக்கைகளை இந்த வருடம் முழுவதும் ஆன்மீக அமைப்புகள்,ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள்,ஜோதிட பயிற்சிவகுப்புகள்,புராதனமான கோவில்கள்,தேய்பிறைஅஷ்டமி நாட்கள்,சிவராத்திரி,அமாவாசை நாட்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் தமிழ்நாடெங்கும் விநியோகிக்க திட்டமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
நமது ஆன்மீகப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள்,நம்மை நேரில் சந்தித்தவர்கள் இந்த ஆன்மீக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கெடுத்துக்கொள்ளும்படி அழைக்கிறோம்.
நீங்கள் மூன்று விதமாக இந்த பிரச்சாரத்தில் பங்கெடுக்கலாம்.
1.நீங்களே உங்கள் பகுதியில் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் பற்றிய துண்டறிக்கை(நோட்டீஸ்)யை விநியோகிக்கலாம்.

2.நீங்களே இந்த ஓம்சிவசிவஓம் துண்டறிக்கையை குறைந்தது 1000 எண்ணிக்கையில் அச்சடித்துத் தரலாம்.(அச்சடிக்க செலவு 1000 பிரதிகளுக்கு ரூ.500/-க்குள்தான் ஆகும்)
3.இணையம் வழியாக ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்துக்குரிய வலைப்பூவை www.omshivashivaom.blogspot.com ஐ பரப்பலாம்;இதில் உள்ள பதிவுகளில் உங்களுக்கு விருப்பமான பதிவை உங்களில் முகநூலிலும்(facebook), குழுவிலும்(groups,discussion board),அரட்டை அறையிலும்(chat) பரப்பலாம்.மறக்காமல் மேலே உள்ள வலைப்பூ முகவரியை அத்துடன் இணைக்கவும்.
இவ்வாறு செய்வதன்மூலமாக,உங்கள் பிரச்சாரத்தினால் சிலபல நல்ல உள்ளங்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குவார்கள்;இதனால் உங்களின் தீராத மன உளைச்சல்கள் தீரும்;நீண்டகால பிரச்னைகள் முடிவுக்கு வரும்(எனக்கு அப்படித்தான் ஆனது);அப்படி ஜபிப்பவர்களின் பிரச்னைகள் தீரும்;முடிவாக இந்தியாவானது விரைவாக வல்லரசு நிலையை எட்டும்;இதன் மூலமாக மின்சாரப்பற்றாக்குறை விரைவாகத் தீரும்;அனைவரின் தனிநபர் வருமானம் அதிகரிக்கும்;செலவுகள் குறையும்.

பின்குறிப்பு:இந்த வருடத்தில் நமது பூமியும்,நாடும்,மாநிலமும் பல பிரச்னைகள் சந்திக்க இருப்பது நவக்கிரகங்களின் செயல்பாடுகள் மூலமாக அறிகிறோம்.இதை தடுக்க நாம் செய்யும் முக்கியமான ஆன்மீக சேவை+ தேச சேவை & மக்கள் சேவை இதுதான்.
நீங்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் வெறும் 100 நாட்களுக்கு தினமும் ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவிட்டு,இந்த பதிவினை மீண்டும் வாசிக்கவும்.அப்போது என்ன உணர்வீர்கள் தெரியுமா?

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்

http://www.aanmigakkadal.com/2012/04/blog-post_03.html

Wednesday, 4 January 2012

முல்லைப் பெரியாறு - தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது



  

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டுதமிழ் நாட்டை 
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.
மீடியாக்களில்,டெல்லியில்,அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !
116 வருட சுண்ணாம்பு அணை இன்னும்
எவ்வளவு நாள் தாங்கும்?
தங்கள் இடத்திலேயே -
தங்கள் செலவிலேயே -
புதிய அணையைக் கட்டி,
தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக
கேரளா சொல்கிறதேஒப்பந்தம் எழுதிக்
கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது?
இது என்ன வீண் பிடிவாதம்?
இது என்ன பைத்தியக்காரத்தனம்?”
இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.
கேரளாஇதுவரை செய்த அநியாயங்கள்,
புதிய அணை கட்டிஇனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் -
இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயேசென்னையிலேயே கூட,
படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !
புதிய அணை கட்டுவதில் என்ன தவறு? -அதான்
அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே
என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும்,அரசியல் கட்சிகளும்
தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்
சொல்ல வேண்டும். இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.
புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும்
சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில்
எடுத்துச் சொல்ல வேண்டும்.
இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக -
நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக
கீழே தருகிறேன்.
முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது
பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில்- 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்
சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக
கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்
வரையரைக்குள் தான் இருந்தது)
எனவே பிரிட்டிஷார்-திருவாங்கூர் மஹாராஜாவுடன்
இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு 
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை
999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு
ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த 
அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்
கட்டி முடித்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால்,இதில்
அடிப்படையானபெரியாறு உற்பத்தியாவது  
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.
ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !
இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம்பாசனம் பெறும் நிலம் 
சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய
4 மாவட்டங்களைச் சேர்ந்த10 லட்சம் விவசாயிகள்
பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள்குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால்இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும்.இத்தனை ஜனங்களும்
பிழைப்பு பறிபோய்பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.
பிரச்சினை ஆரம்பித்தது எப்படி?எப்போது?
கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.
பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே
15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார்10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும்.
(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)
ஆனால்இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. 
கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரியஅணையைக் கட்டி விட்டார்களே தவிர அது
நிரம்பும் வழியாகக் காணோம்.3 வருடங்கள் 
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி
நிரம்பவே இல்லை. 
அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -
பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற
குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !
புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம்?
மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,
நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.
சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு
தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே
என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.
அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.
புதிய அணையை கட்டப்போவது 1853 அடி
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து,ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக்கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணைஎப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.
புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.
ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே  ?
அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.
முதலாவதாக -
பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -
மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -
நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்
வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்துஅதன் முழு நீரும்
(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,
நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு
உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு,நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
இருந்தாலும்வெளியேறும்நீர் பெரியாறு 
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்
ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து
தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
என்கிற பேச்சே அபத்தமானது.
இரண்டாவதாக -
1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி
அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.
கேரளா சொல்வது போல்
இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக1933ல்
40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே
செலுத்தப்பட்டது.மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.
2000 ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -
நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -
லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்
கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -
ஒரு கவசம் போல்,கிட்டத்தட்ட புது அணையே போல்,
கான்க்ரீட் போடப்பட்டு,ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.
கீழே உள்ள வரைபடத்தைப்
பார்த்தால் நன்றாகப் புரியும்.
Description: http://immail.rediff.com/icons/rediff_mail_gold/grayblock.gif
இதன் பிறகு தான்27/02/2006 அன்று,
சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை
என்பதைநிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்
என்று அனுமதியே கொடுத்தது.
விட்டார்களா நமது கேரள சகோதரர்கள்?
மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,
கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி,சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி
விட்டார்கள்.
வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.
மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது,இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
பரிசீலனையில் இருக்கும்போதே -
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக
இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம்
ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை
கட்ட வேண்டும் என்று.
பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரைபோய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்
கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்
இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
தமிழ் நாடு ஏமாந்தது போதும்.
உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல்.
தமிழகம் முழுவதும் சேர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும்.
ஒரே குரலில் பேச வேண்டும்.
உண்மையை  உரக்கச் சொல்ல வேண்டும்.
அகில இந்தியாவிற்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்.
நம் தரப்பு நியாயம் அனைவருக்கும் புரியும்படி 
சுப்ரீம் கோர்ட்டுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் !
நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
 
received from mail 

Tuesday, 3 January 2012

35th CHENNAI BOOK FAIR - 2012


கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்........


கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி.....

முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களை தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும் 30 - 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர். அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான் போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ் வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்.... இது ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம், இதை நம் தமிழ் ஹீரொ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்.

இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions) படியுங்கள் (
www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டி கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது". உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர் டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்..... தயவு செய்து வீட்டில் இருக்கும் டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன் பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்.... தயவு செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லுங்கள்.

Recevied from mail