Saturday, 27 August 2011

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?


பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும். வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும்
சோமசூத்தகப் பிரதட்சிணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல்  அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும்  வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். அந்தந்த திசாபுத்திகள் நடைபெறுபவர்கள் அந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர்.
விரதம் அனுஷ்டிக்கும் முறை: வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும்.
நந்திதேவர் துதி
நந்திஎம் பெருமான்தன்னை  நாள்தோறும் வழிப்பட்டால்
புந்தியில் ஞானம் சேரும்  புகழ்கல்வி தேடிவரும்
இவ்வுலக இன்பம்யாவும்  இவரடி தொழ உண்டு!
அவ்வுலக அருளும்கூட   அவர்துதி பாட உண்டு!
முற்பிறவி வினைகள்யாவும்  தீயிட்ட மெழுகாகும்
நந்தியின் பார்வை பட   நலங்கள்உடன் கிட்டும்!
ஈசனுக்கு எதிர் அமர்ந்து   இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்
நந்தீசர் நற்பாதம்   நாம் தொழுவோமே!

சொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்

     

             சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா?  அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.
இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , ராகு காலம் சனி ஓரையுலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். இதுதவிர, சொர்ண ஆகர்ஷ்ன பைரவருக்கு நடைபெறும் சகல அபிஷேக, அலங்கர பூகைளில் கலந்து கொண்டு பிராத்திப்பதன் மூலம் அவரது முழுமையான அணுகிரகத்தை அடையலாம்.
          அப்போது பால்,தேன்,இளநீர், பன்னீர், திருமஞ்சன பொடி , மஞ்சள்,சந்தனம், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகப் பொருட்களுடன் செவ்வரளிப் பூக்கனையும் சொர்ண ஆகர்ஷன பைரவரின் பூஜைக்காக கொடுப்பது நல்லது.
       இந்த அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும் போதும், செவ்வரளிப் பூக்களைக் கொண்டு பூஜை நடத்தப்படும் போதும்,பைரவர் திருமந்திரத்தை மனதில் பிரார்த்தித்து, கோரிக்கைகளை சொர்ண  ஆகர்ஷன பைரவரிடம் சமர்ப்பித்தால் பிராத்தனைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்கிறார்கள்.
மேலும், சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.

   சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.முடிந்தால் இந்த நாளில் பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து,மாலை சூரியன் மறைந்ததும் வீட்டை வாசலைப் பெருக்கியதும்,இந்த மந்திரங்களை 9 இன் மடங்குகளில் ஒவ்வொன்றையும் ஜபித்துவிட்டு,விரதத்தை முடிக்க இழந்த அனைத்தும் கிடைக்கும்.

ஒருவேளை பகல் முழுவதும் விரதம் இருக்க இயலாதவர்கள்,மதியம் மட்டும் சாப்பிடாமல் இருந்து மாலையில் மேற்கூறியதுபோல் பின்பற்றி விரதம் முடிப்பதும் நன்று.இதைத் தவிர,வேறு பல வழிமுறைகள் உங்களுக்கோ,உங்களின் ஜோதிட குருநாதருக்கோ,ஆன்மீக வழிகாட்டிகளுக்கோ,உங்களின் பகுதி பிராமணர்களுக்கோ தெரிந்திருக்கும்.அவற்றில் உங்களால் முடிந்தவற்றை பின்பற்றவும்.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி
 ஓம் பைரவாய வித்மஹே
 ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி: 
 தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!  


ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் தியான சுலோகம்
காங்கேய பாத்ரம் டமரும் த்ரிசூலம்
வரம் கரை ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்
ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மகா மந்திரம்
 ஓம் அஸ்ய ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ
மகா மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷிஹ பங்திஸ் சந்தஹ
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதாஹ்
ஸ்வர்ணாகர்ஷணாகர்ஷண பைரவ ப்ரசாத சித்யர்த்தே
ஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோகஹ

சொர்ண ஆகர்ஷண பைரவர் நாமாக்கள்
 ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
ஓம் ஸ்வர்ணாகாஷணபைரவ நமஹ
ஓம் பக்தப்பிரிய நமஹ
ஓம் பக்த வச்ய நமஹ
ஓம் பக்தா பீஷ்ட பலப்பர நமஹ
ஓம் ஸித்தித நமஹ
ஓம் கருணாமூர்த்தி நமஹ
ஓம் பக்த பிஷ்ட ப்ரபூரக நமஹ
ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ
ஓம் ரசஸித்தித நமஹ


ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம் 1
 ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய
மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூலமந்திரம் 2
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹீம்பட் ஸ்வாஹா!
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய விருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா!

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம் 3
 ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
வம்ஸஹ ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய
மமதாரித்ரய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!

Saturday, 6 August 2011

கலாமும் , கடவுளும் ( அவசியம் படிக்க வேண்டிய பதிவு ) Description: http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTlhx-AfC1tqZFgqptlDn5LCKOF1f4GIYnQ3HgMQPG-fEqmBUVr
      மாசு மருவற்ற  நம் சம காலத்து மகாத்மா  - தான் பதவியில் அமர்ந்ததால் குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்த  Dr . APJ அப்துல் கலாம் அவர்களின்பள்ளிப் பருவத்தில் நடந்ததாக கூறப்படும்ஒரு சுவையான நிகழ்ச்சி. நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில்பெரு மகிழ்ச்சி.. 

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ....... அவரது ஆசிரியருடன்..

.ஆசிரியர்: ஆககடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

கலாம்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?  

கலாம்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் 
நேசிப்பவன். கடவுளிடம்ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

கலாம்: (மெளனம்)

ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை இளைஞனே அப்படித்தானேநாம் மறுபடியும் முதலிலிருந்துஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?

கலாம்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லைகடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: ஆககெட்டவற்றை படைத்தது யார்?

கலாம்: (பதிலில்லை)

ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள்ஒழுக்கமின்மைபழியுணர்ச்சிமோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

கலாம்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போயார் இதையெல்லாம் உருவாக்கியது?

கலாம்: (பதிலில்லை)

(இங்கிருந்து கவனமாக படியுங்கள்)

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயாஇல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல்முகர்ந்தாவது இருக்கிறாயாஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா

கலாம்: ஆம்.

ஆசிரியர்: ஆகஅனுபவத்திலிருந்தும்ஆய்வுகளிலிருந்தும்சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது. நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது

கலாம்: ஐயாவெப்பம் இருக்கிறதா?ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: இல்லை ஐயாகுளிர் என்பது இல்லை.

(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போதுஇருவரையும்கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

கலாம்: ஐயாநம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறதுமிகு வெப்பம்தாழ் வெப்பம்குறைந்த வெப்பம்வெள்ளை வெப்பம்மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது. நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை)போக முடியும் அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

கலாம்: சரி ஐயாஇருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம்சாதாரண வெளிச்சம்பளிச்சிடும் வெளிச்சம்பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததைஅதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையாஇருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை?விளக்கமாக சொல் பார்க்கலாம்?
கலாம்: ஐயாஉங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள். கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒருஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள். ஐயாஅறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை. மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை. இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது. இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயாஇறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள் அப்படித்தானேநீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

கலாம்: இந்த வகுப்பில் இருக்கும்எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோகேட்டோதொட்டோஉணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களாஎவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா,அனுபவத்திலிருந்தும்ஆய்வுகளிலிருந்தும்சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது. தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயாநாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே

கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான்நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும்வைத்திருக்கின்றது.

எப்பூடி...?

Friday, 5 August 2011

Share this valuable information1. If you see children Begging anywhere in TAMIL NADU, please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2. Where you can search for any BLOOD GROUP, you will get thousand's
of donor address. www.friendstosupport.org

3. Engineering Students can register in www.campuscouncil.com to
attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped/Physically
Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.

5. If anyone met with fire accident or people born with problems in
their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by
Kodaikanal PASAM Hospital . From 23rd March to 4th April by German
Doctors.

Everything is free. Contact : 045420-240668,245732
"Helping Hands are Better than Praying Lips"

6. If you find any important documents like Driving license, Ration
card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put
them into any near by Post Boxes. They will automatically reach the
owner and Fine will be collected from them.

7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than
what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So
let all of us lend our hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics

8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all
Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"

9. Special phone number for Eye bank and Eye donation: 04428281919
and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information
about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/

10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba
Institute Banglore. 10.
Contact : 9916737471

11. Medicine for Blood Cancer!!!!
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its
available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create
Awareness. It might help someone.

Cancer Institute in Adyar, Chennai
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
044-22350241 044-22350241

12. Please CHECK WASTAGE OF FOOD
If you have a function/party at your home in India and food gets
wasted, don't hesitate to call 1098 (only in India ).
This is the number of Child helpline.
Information from goolge

அதிசய அகத்தியர்!


சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய “அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்” வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில்இந்திர விழாவை எடுப்பித்தார் அகத்தியர்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.
 

அகத்தியர் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன.

தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார்.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி Go to fullsize imageமுருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் Go to fullsize imageகாகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
இவை போல் அகத்தியரைக் குறித்து புராணங்களில் உள்ள கதைகள் பற்பல.
சித்த வைத்தியம்
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.
அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1.அகத்தியர் வெண்பா
2.அகத்தியர் வைத்தியக் கொம்மி
3.அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4.அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5.அகத்தியர் வைத்தியம் 1500
6.அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7.அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8.அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9.அகத்தியர் வைத்தியம் 4600
10.அகத்தியர் செந்தூரம் 300
11.அகத்தியர் மணி 4000
12.அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13.அகத்தியர் பஸ்மம் 200
14.அகத்தியர் நாடி சாஸ்திரம்
15.அகத்தியர் பக்ஷணி
16.அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17.சிவசாலம்
18.சக்தி சாலம்
19.சண்முக சாலம்
20.ஆறெழுத்தந்தாதி
21.காம வியாபகம்
22.விதி நூண் மூவகை காண்டம்
23.அகத்தியர் பூசாவிதி
24.அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது.  மேலும்
1.அகத்திய ஞானம் என்னும்  ஐந்திலக்கணம்
2.அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்
1.தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2.சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3.தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4.விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5.கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6.சித்த வைத்திய சிகரமே போற்றி!
7.சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8.இசைஞான ஜோதியே போற்றி!
9.உலோப முத்திரையின் பதியே போற்றி!
10.காவேரி தந்த கருணையே போற்றி!
11.அகத்தியம் தந்த அருளே போற்றி!
12.இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13.அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14.அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15.இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16.இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
நிவேதனம்
பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.
அகத்திய முனிவரின் பூசா பலன்கள்
1.இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2.கல்வித்தடை நீங்கும்.
3.புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4.முன்வினை பாவங்கள் அகலும்.
5.பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6.பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7.பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8.சகலவிதமான நோய்களும் தீரும்.
9.குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்
Go to fullsize image ஓம் அகத்தியரே போற்றி!
சிரிப்பதற்கு ஒரு தமிழ்வலைப்பூ

தமிழில் சிரிப்பதற்கு ஒரு வலைப்பூ இருக்கிறது.அதே வலைப்பதிவு ஹீமோகுளோபினர் இன்னொரு வலைப்பூவையும் நடத்துக்கிறார்.சிரிக்க மறந்துவிட்ட நான்,சிரிப்பதை நிறுத்த மறந்தேன்.                             கொஞ்சம் சிரிச்சுட்டு வருவோமா?

Thursday, 4 August 2011


இந்திய அணியில் மாற்றம்Thursday, 04 August, 2011   02:36 PM
.
இந்திய அணியில் மாற்றம் புதுடெல்லி, ஆக.4: காயம் காரணமாக இந்திய அணியிலிரந்து யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டுள்ளனர்.
.
அவர்களுக்கு பதிலாக கோஹ்லி மற்றும் ஓஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் பங்கேற்ற யுவராஜ்சிங் குக்கு கையில் காயம் ஏற்பட்டது.

2வது இன்னிங்சின் போது பிரஸ்னன் வீசிய பந்தில் அவருக்கு கைவிரலில் காயம் உண்டானது. அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹர்பஜன்சிங் வயிற்று தசை பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.

எனவே இந்த இருவரும் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர் வீரத் கோஹ்லி மற்றும் சுழல்பந்து வீச்சாளர் பிரைக்யான் ஓஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கோஹ்லி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் இந்தியஅணியில் இடம் பெற்றிருந்தார். ஏற்கனவே ஜாகீர்கானுக்கு ஏற்பட்ட காயத்தால் இந்திய அணி அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக் இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத அவர் இங்கிலாந்து வந்துள்ளார். மூன்றாவது டெஸ்டில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, 3 August 2011

சப்த கன்னியர்கள் பிறந்த கதையும் அவர்களை வழிபடும் முறைகளும்


சப்தகன்னியர்கள் பிறந்த கதை

                 அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.மனித கர்ப்பத்தில் பிறக்காமலும்,ஆண் பெண் இணைவில் பிறக்காமலும்,அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே  

ப்ராம்மி,
மகேஸ்வரி,
கவுமாரி,
வைஷ்ணவி,
வராஹி, 
இந்திராணி 
சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்.

        அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி.மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள்.அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள்.மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும்.(அசைவம் தவிர்க்க வேண்டும்.வீட்டிலும்,வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.)ஐ.ஏ.எஸ்.,வங்கிப்பணி,அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.

பிராம்மியின் காயத்ரி மந்திரம் :

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி.ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார் எனில் இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும் வேண்டுமோ? வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்துவருபவள்.இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.

இவளது காயத்ரி மந்திரம் வருமாறு:

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.

அம்பிகையின் இன்னொரு அம்சம் கவுமாரி.கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள்.ஈசனும் உமையுமாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள்.முருகனின் அம்சமே கவுமாரி.இவளுக்கு சஷ்டி,தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு.மயில் வாகனத்தில் வருபவள்.அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே.இவளை வழிபட்டால்,குழந்தைச் செல்வம் உண்டாகும்.(குழந்தைச் செல்வத்திற்கு ஏங்குபவர்கள் கவனிக்கவும்)

கவுமாரியின் காயத்ரி மந்திரம்:

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கவுமாரி ப்ரசோதயாத்.

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி.சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.(வட பாரதத்தில் வைஷ்ணவி வழிபாடு எதனால் விசேஷம் எனப் புரிகிறதா?)

வைஷ்ணவியின் காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்.

அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி.உலகத்தின் சகல உயிர்களும் தோன்ற பெண் பிறப்புறுப்புதான் காரணமாக இருக்கிறது. தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும்,அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத்தருவதிலும்,மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால்,அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால்,மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திராணியின் காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்:

அம்பிகையின் பிருஷ்டம்(குண்டி)பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும்,உடம்பைத் தாங்குவதும்,ஓய்வுதருவதும் ஆகும்.இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள்.இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும்.இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு.இது சிவனின் அம்சமாகும்.அம்பிகையின் அம்சமாக பிறந்ததால்,இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள்.எதையும் அடக்க வல்லவள்.சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள்.மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.

வராஹியின் காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்:

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள்,தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள்.இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறுகைகள்,பதினாறு விதமான ஆயுதங்கள்,மூன்று கண்கள், செந்நிறம் ,யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள்.சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே!சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே! இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். (மாந்திரீகத்தில்) இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது,இவளை அழைத்தால்,புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

இவளது காயத்ரி மந்திரம்:

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்:

சப்த கன்னிகைகளின் சூட்சும படைப்பு ரகசியம் என்னவெனில்,பெண்ணின் சக்தியிலிருந்து பெண்மையாக உருவெடுத்தவர்கள்.கன்னிகையாக இருப்பதற்குக் காரணம் மேலோட்டமாக மட்டுமே விளக்க முடியும்.சப்த கன்னிகையின் ஸ்தானத்தை உணர விரும்புபவர்கள் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு தினமும் இந்த சப்த கன்னிகைகளின் காயத்ரி மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபித்துவந்தால் உணரலாம்.

இருந்தாலும், ஒரு சுருக்கமான நமது ஐம்புலனறிவுக்குப் புரியும்விதமாக கொஞ்சம் விளக்குவோம்:

கன்னித்தன்மை (விர்ஜின்) என்பது உயிர்களை உருவாக்கி அளிக்கும் நிலைக்கு முந்தைய பவித்ரமான நிலை.கன்னித்தன்மை என்றால் மிகவும் தூய்மையான என்றும் ஒரு அர்த்தம் உண்டு.

கன்னித்தன்மையை தாய்மைக்கு இட்டுச்செல்லலாம்.அதற்கு அனுமதி ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு.ஆனால்,கன்னித்தன்மையை களங்கப்படுத்தக்கூடாது.(அப்படி களங்கப்படுத்தினால் களங்கப்படுத்துபவனுக்கு மேற்கூறிய சப்தகன்னிகைகளின் வரங்களில் ஏதாவது ஒன்று மட்டுமாவதை இழந்தே ஆக வேண்டும் என்பது சாபம்)இவர்களின் அவதார நோக்கமும் தங்களுடைய முழுமையான சக்தியோடு விளங்கிடுதல் மற்றும் ஆண்மைசக்தி எனப்படும் சிவமூலத்தை துணையாகக் கொள்ளாததும் இவர்களின் சிறப்பாகும்.சப்தகன்னியர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல;ஆண்களுக்கும் ஒரு பலமே!