இந்திய அணியில் மாற்றம்
Thursday, 04 August, 2011 02:36 PM | |
. | |
இந்திய அணியில் மாற்றம் புதுடெல்லி, ஆக.4: காயம் காரணமாக இந்திய அணியிலிரந்து யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டுள்ளனர். | |
. | |
அவர்களுக்கு பதிலாக கோஹ்லி மற்றும் ஓஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் பங்கேற்ற யுவராஜ்சிங் குக்கு கையில் காயம் ஏற்பட்டது. 2வது இன்னிங்சின் போது பிரஸ்னன் வீசிய பந்தில் அவருக்கு கைவிரலில் காயம் உண்டானது. அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹர்பஜன்சிங் வயிற்று தசை பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். எனவே இந்த இருவரும் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர் வீரத் கோஹ்லி மற்றும் சுழல்பந்து வீச்சாளர் பிரைக்யான் ஓஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கோஹ்லி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் இந்தியஅணியில் இடம் பெற்றிருந்தார். ஏற்கனவே ஜாகீர்கானுக்கு ஏற்பட்ட காயத்தால் இந்திய அணி அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக் இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத அவர் இங்கிலாந்து வந்துள்ளார். மூன்றாவது டெஸ்டில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. |