Wednesday, 5 September 2012

ஏன் ஒரு கோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?நல்ல கேள்வி!!! உங்களிடம் மூன்று கோடி ரூபாய்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்;அதைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்?

நிச்சயமாக நாம் எதையெல்லாம் நீண்டநாட்களாக விரும்பினோமோ அதை அனுபவித்துவிடுவோம்;இன்றுதான் நமது நாட்டிலேயே விலை உயர்ந்த கார்கள்,விலைமதிப்பற்ற நகைகள்,ஆடம்பரமான வீடுகள் என எல்லாமே கிடைக்கின்றன.
ஒரு முறை எனது ஆஸ்தான ஜோதிடர் ஒருவரிடம் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்டேன்:

அண்ணே,உங்களிடம் ஒரு கோடி ரூபாய் தந்து அதை ஒரே நாளில் செலவழிக்கணும்னு நான் சொன்னா நீங்க என்ன செய்வீங்க?

அவர் மனதுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.அந்த  சிரிப்பின் ஒரு பகுதி அவரது புன்னகையாக வெளிவந்தது.

சொல்லுங்க; என்று அவரை வற்புறுத்தினேன்.

டெல்லியில் ஒரு ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் நிறுவனம் இருக்குது;அங்கே ஒரு நாள் வாடகை அம்பது லட்சம் ரூபாய்! அதை நம்ம ஊருக்கு வரச் சொல்லுவேன்;மீதியை எப்படிச் செலவழிப்பேன்னு உனக்குத் தான் தெரியுமே?
என அவர் படபடவென சொல்லி முடித்ததும்,நாங்கள் இருவருமே சிரித்தோம்;அந்த சிரிப்பு சிரித்து முடிய சில நிமிடங்கள் ஆனது.

இன்று நமது நாடு இருக்கும் நிலையில் சாதாரணக் குடும்பங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதே பெரிய சாதனையாக மாறிவிட்டன;ஏனெனில்,தினம் தோறும் விலைவாசி ஏறுகிறது;ஆனால்,சம்பளம் மட்டும் வருடத்துக்கு ஒருமுறைதான் உயருகிறது.எப்படி காலம் தள்ளுவது?தனிமனிதனின் நிலை உயர்த்தப்பட்டால்,அவனது உயர்வு அவன் பணிபுரியும் நிறுவனம் மற்றும் அமைப்பின் நிலையை உயர்த்திவிடும்.அந்த நிறுவனங்களின் நிலை உயர்ந்தால்,அதன் தொடர் விளைவாக ஒரு நாட்டின் நிலையும் உயர்ந்துவிடும்.எனவே,அடிப்படையில் ஒவ்வொரு தனிமனிதனையும் முன்னேற்றுவதே நமது இறைசேவை ஆகும்.ஆனால்,இன்று இலவசமாக இப்படிப்பட்ட முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஆன்மீக அமைப்புகளைத் தேட வேண்டியிருக்கிறது.அதற்கு தகுந்தாற்போல நமது நாட்டையும் முதலாளித்துவ நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.இதனால்,பணம் இருப்பவர்களிடம் மேலும் மேலும் பெருமளவு பணம் குவிந்துகொண்டிருக்கிறது;பணம் இல்லாதவர்கள் தினசரி வாழ்க்கை வாழ்வதே சாதனையாகிக்கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில் இருப்பவன்,இல்லாதவன் இந்த இருவருக்குமிடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் சக்தி ஓம்சிவசிவஓம் ஜபிப்பதாலும்,ஜபிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாலும் உருவாகிவருகிறது.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழுகோடியே ஐம்பது லட்சம் பேர்கள் ஆகும்.தமிழ்நாட்டுக்கு வெளியே சுமார் மூன்று கோடித்தமிழர்கள் இந்தியாவெங்கும் மற்றும் உலக நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களில் பத்தில் ஒருவருக்கு ஓம்சிவசிவஓம் எப்படி ஜபிப்பது? என்ற வழிமுறை சென்றடைய வேண்டும் என ஆன்மீகக்கடல் விரும்புகிறது.இந்த மகத்தான தெய்வீகம் சார்ந்த தேசசேவையில் நீங்களும் பங்கேற்கலாம்;எப்படித் தெரியுமா?


ஆயிரம் நோட்டீஸ் அச்சடித்து ஆன்மீகக்கடலுக்கு அனுப்பி வைக்கலாம்;ஆயிரம் நோட்டீஸிக்கு ரூ.450/-தான் ஆகிறது.அக்டோபர் 2012 வது மாதத்தில் இரண்டு சனிப்பிரதோஷங்கள் வர இருக்கிறது.இந்த நாட்களில் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ்களை விநியோகிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்;(ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள் குறைந்தது  5000 அச்சடித்து எமக்கு அனுப்புவது நல்லது)


அல்லது


நீங்களே அச்சடித்து உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸை விநியோகிக்கலாம்;இதன் மூலமாக உங்களால் உங்களுடைய ஊரில் ஒருசிலராவது ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்பார்கள்;அவர்கள் அவ்வாறு ஜபிப்பதற்கு நீங்கள் காரணமாக இருக்கப்போவதால்,அவர்களின் ஜபத்தின் பலன்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் உங்களை வந்து சேரும்.இதன் மூலமாக உங்களுடைய மன உளைச்சலும்,பிரச்னைகளும் தீர்ந்துவிடும் அல்லது தீர்ந்துவிடுமளவுக்கு நீங்கள் சக்தி வாய்ந்தவராக மாறிவிடுவீர்கள்.கடந்த காலங்களில்  பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு இதுதான் நிகழ்ந்திருக்கிறது.


அல்லது


எம்மோடு அக்டோபர் 2012 இல் வரும் சனிப்பிரதோஷங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் விநியோகிக்க வரலாம்;எங்கே என்பதை அறிய செல் எண்,போட்டோவுடன் மெயில் அனுப்பவும்;


அல்லது


இணையம் வழியாக ஓம்சிவசிவஓம் வலைப்பூவையும்,நோட்டீஸையும் பரப்பலாம்; groups, Facebook, google+,  free image hosting webs மற்றும் உங்களுடைய blogspots,wordpresses,google webpages,freewebs மூலமாக பரப்பலாம்.இப்படி இந்த வருடம் முழுவதும் பரப்புவது அவசியம் மற்றும் அவசரம் ஆகும்.ஏனெனில்,இதன் மூலமாக வர இருக்கும் அழிவுகளை பெருமளவு குறைக்க முடியும்.


நீங்கள் ஒரு நாளுக்கு 30 நிமிடம் வீதம் சுமார் 100 நாட்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தீர்கள் எனில்,மேலே கூறிய அத்தனை விதமான வழிமுறைகளையும் நீங்களே நடைமுறைப்படுத்தத் துவங்குவீர்கள்.

ஒரு புள்ளிவிபரப்படி,சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை நெருங்கிவிட்டது;கோயம்புத்தூரின் மக்கள் தொகை பதினேழு லட்சம் ஆகும்.தவிர ,தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத்தொகுதிகள் இருக்கின்றன.இதுவரையிலும் சுமார் 25 நகரங்களில் இருக்கும் 30 சிவாலயங்களில் தான் ஓம்சிவசிவஓம் விநியோகம் ஆகியிருக்கிறது.இது போதவே போதாது;வாருங்கள்! கை கொடுங்கள்!! நமது ஆன்மீக சக்தியை அதிகரிப்போம்;நமது நாட்டின் பொருளாதாரத்தை ஆன்மீக வழியில் வலுப்படுத்துவோம்;இந்த உலகத்தின் ஒரே வல்லரசாக மாற்ற முயலுவோம்;


ஓம்சிவசிவஓம்


 Thanks to 

http://www.aanmigakkadal.com/2012/09/blog-post_5.html