Tuesday, 26 July 2011

கோளறு திருப்பதிகம்


மறைக்காட்டுநாதர் கோவில், திருமறைக்காடு (வேதாரண்யம்)
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்
திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
மறைக்காட்டுநாதர், வேதாரண்யேசுவரர்
இறைவி பெயர்
வேதநாயகி, யாழினு இனிய மொழியாள்
பதிகம்
திருநாவுக்கரசர் – 5
திருஞானசம்பந்தர் – 4
சுந்தரர் – 1
எப்படிப் போவது
நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மி. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. அருகில் உள்ள ரயில் நிலையம் அகஸ்தியம்பள்ளி சுமார் 3 கி.மி. தொலைவில் உள்ளது. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.
கோவில் விபரங்கள்: வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம். இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார். இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இத்தலத்தில் உள்ள இறைவி யாழினும் இனிய மொழியாள் என்று அழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தை விட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள். துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.
இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது. இராமர் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிப் பூஜித்த விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி கோவிலின் பிரகாரத்தில் மேற்கு திசையில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில் காட்சி அளிக்கின்றன. முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும் கோவிலில் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.
இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் உள்ளன. முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது நம்பிக்கை.
தல புராண வரலாறு: ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.
ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு. அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி
1. வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன் 
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி 
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆக அறும் நல்லநல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
2. என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க 
எருது ஏறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும் 
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
3. உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து 
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி 
திசை தெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
4. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து 
மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
கொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதர் 
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
5. நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் 
விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் 
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
6. வாள்வரி அதன் ஆடை வரி கோவணத்தர் 
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
கோற் அரி உழுவையோடு கொலை யானை கேழல் 
கொடு நாகமோடு கரடி
ஆள் அரி நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
7. செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக 
விடையேறு செல்வன் அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பித்தும் 
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
8. வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்த 
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் 
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
9. பலபல வேடமாகும் பரன் நாரிபாகன் 
பசு ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் 
வருவகாலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
10. கொத்து அவர் குழலியோடு விசயற்கு நல்கு 
குணம் ஆய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில்ல் அழிவிக்கும் அண்ணல் 
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
11. தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி 
வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து 
மறைஞான ஞானமுனிவன்
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில் 
அரசாள்வர் ஆணை நமதே. 
என்ற கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.
ஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று திருமறைக்காடு கோவில் தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது. தன்னையறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோவில் விளக்கு அணையாமல் காத்த பயனின் காரணமாக எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. இதன் விபரத்தை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை – “ஆதியில் பிரமனார் தாம்” என்று தொடங்கும் பதிகம்) தெரிவிக்கிறார்.
“நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபந் தன்னைக்
கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே”
இப்பாடலின் பொழிப்புரை : 
மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக்காட்டில் நீண்டு எரியும் விளக்கில் 
ஊற்றியுள்ள நெய் தனைக் கறுத்த நிறத்தை உடைய எலி உண்ண வந்த போது 
அதன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி 
விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் 
சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை 
எல்லாம் ஆளுமாறு மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்து 
குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார். 
வேதாரண்யம் கோவில் விளக்கழகு என்பது பழமொழி. வேதாரண்யம் பார்க்கப் போகும் நீங்கள் மாலை நேரத்தில் சென்று அந்த விளக்கழகையும் தரிசித்து இன்புறுங்கள்.

Thursday, 21 July 2011

2050 வரை திமுக ஆட்சி நடந்திருந்தால்?       
                 
           2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டின் வரலாறு எப்படி எழுதப்பட்டிருக்கும்.முதலில் " கடவுள் வாழ்த்து " 
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி 
திருக்குவளை தீய சக்தியே போற்றி 
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி 
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி 
கனிமொழியின் தந்தையே போற்றி 
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி 
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி 
தளபதியின் தந்தையே போற்றி 
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி 
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி 
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி 
சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி 
ஈழத்தை அழித்த இதயமே போற்றி 
தமிழின துரோகியே போற்றி போற்றி 

அடுத்து மொழி வரலாறு: தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது. 

தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர். 

2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி ( நம்ம கவிஞர் வாலிதான்)  என்பவர் தான்திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார்.  

21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். 

கணிதம்:  திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி,  பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும். 

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும். 

புவியியல்:  உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம். 

விஞ்ஞானம் விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி,  கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார். 

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று. 

வரலாறு: தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார். 

கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி. 

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன். திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே  சென்றார்   அஞ்சா நெஞ்சன். 

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன்.  அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன். 

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி. பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்.Thanks to   சிந்திக்கவும் Blogger

Wednesday, 20 July 2011

நிஜ சம்பவம் : சோதனைகளைக் கடந்து சாதித்துக் காட்டிய ஒரு மனிதனின் சரித்திரம்               சுமார் ஆறு வருடங்களுக்கு முன், தினமலரில் வெளியான கட்டுரை இது. ஒரு சாதாரண மனிதன் , தன்னுடைய விடா முயற்சி , கடின உழைப்பு மூலம் எவ்வளவு சாதிக்க முடியும் என்பது இதை வாசிக்கும்போது நீங்கள் உணர முடியும். 

              நீங்களும் தெரிந்து கொள்ள உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கட்டுரை , உங்களுக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமையும்.    

மதுரா டிராவல்ஸ் வீ.கே.டி. பாலன் !  


               திருச்செந்தூரில் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து வளர்ந்த அந்த இளைஞனுக்கு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அடிமை மனப்பான்மை கொண்ட பரம்பரைத் தொழிலை செய்ய விரும்பாமல் பெற்றோருக்கும் தெரியாமல் வெறுங்கையுடன் சென்னைக்கு ஓடிவந்தான்.
   எழும்பூரில் பிச்சைக்காரருடன் படுத்த படுக்கையாக கிடந்த அவனை  பிடித்த போலீஸ் பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ள விரட்டியது. போலீசாரிடம் சிக்காமல் தப்பியோடிய அந்த இளைஞன் அண்ணாசாலையில் அந்த நள்ளிரவில் ஏராளமானவர்கள் வரிசையாக நின்ற பிளாட்பாரம் ஒன்றில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து கொண்டான்.

அசதியில் தூங்கிவிட்ட அவனை காலையில் தட்டியெழுப்பிய ஒருவர் தம்பி இந்த இடத்தை எனக்குக் கொடு இரண்டு ரூபாய் தருகிறேன் என்றார். அந்த இரண்டு ரூபாய் வருமானத்தில் அவனுடைய பசி அடங்கியது.
அவர் ஏன் இரண்டு ரூபாய் கொடுத்தார் அதற்குக் காரணம் இருந்தது. பாதுகாப்பு தேடி ஓடிவந்த தனக்கு அடைக்கலம் தந்த இடம் அமெரிக்க தூதரகத்தின் முன்பாக உள்ள நடைபாதை என்பதை அவன் விசாரித்து அறிந்து கொண்டான். இரவில் அங்கு அமர்ந்து கொள்வது ஆதரவற்ற தனக்கு பாதுகாப்பு மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய தொழில் வாய்ப்பும் கூட என்பதை அறிந்து கொண்டான். விரட்டிய போலீஸ்காரனை அவன் மனம் வாழ்த்தியது.

ஒவ்வொரு இரவிலும் அந்த நடைபாதையில் ஒரு துண்டையோ அல்லது ஏதாவது ஒரு பொருளையோ போட்டு வைத்து தனது வருமானத்தை முதலில் 10 ரூபாய் பின் 20 ரூபாய் என்று பெருக்கிக் கொண்டான். நாளாக நாளாக அந்தத் தூதரகத்திற்கு வரும் பயண முகவர்களுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட அவனுக்கு விசா, விமான டிக்கட் போன்ற அனைத்து விஷயங்களும்  அத்துப்படியாகிவிட்டன.

அமெரிக்கத் தூதரகத்தின் வீசாவுக்கு தவம் கிடப்போருக்கு இந்த இளைஞன் தேவதூதன் போல காட்சியளித்தான். சுறுசுறுப்பு சுமைகளை சுமக்கத் தயங்காத பண்புகளால் அவனுடைய வாடிக்கையாளர் பெருகிச் சென்றனர்.
அந்த இளைஞனின் வாடிக்கையாளரைப் பார்த்த முகவர்கள் இலட்சம் ரூபாயை  கடன் கொடுக்க முன் வந்தனர். 1986 மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த அந்த இளைஞன் தற்போது ஆண்டுக்கு 12 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் தொழில் அதிபர். ஏராளமான இளைஞர்களையும் கலைஞர்களையும் ஊக்குவித்து வரும் அந்த இளைஞன் வீ.கே.டி.பாலனின் உண்மை வாழ்க்கை வரலாறு இது.

சந்தேகக் கேசில் பிடித்து பொய் வழக்கு போட விரட்டிய போலீஸ்காரன் தன்னை சரியான இடத்திற்குத்தான் விரட்டியுள்ளான். அவனைத்தான் தேடித்திரிகிறேன் பாராட்டுவதற்கு என்று கூறுகிறார் பாலன்.
கடின உழைப்பை நம்புகிறவர்களுக்கு பிளாட்பாரத்தில் மட்டுமல்ல குப்பையிலும் கூட மாணிக்கக் கற்களை கண்டு பிடிக்கும் ஆற்றல் உண்டு. ஆனால் கடின உழைப்பை வெறுப்பவர்கள் தமது மூதாதையர்கள் தேடிச் சேர்த்த மாணிக்கக் கற்களைக்கூட சில ஆண்டுகளில் குப்பையாக மாற்றி விடுவார்கள்.

வெற்றியை விரும்புகிற எவரும் தன்னை அதற்கு தகுதி உள்ளவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். வெற்றிக்கான தகுதிகளில் முதன்மையான ஒன்று ஈடுபாடு மிக்க கடின உழைப்பு. மதுரா டிராவல்ஸ் பாலன் கதை இதற்கு இன்னொரு உதாரணம்.

Read more: http://www.livingextra.com/2011/06/blog-post_28.html#ixzz1SdxoJpZR

தெய்வத்திருமகள் மறைக்கப்பட்ட வழக்கு!


விக்ரம் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் படம் தெய்வத்திருமகள். இந்த படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜனிடமிருந்து படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கி
தற்போது சட்ட ரீதியாக அந்தபடத்தின் தயாரிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராக இருக்கும் யூடிவி மீது ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான நியூ லைன் சினிமா, இந்தியப்பணத்துக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தமது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் ஊடகத்தின் காதுகளை எட்டாமல் மறைக்கப்பட்டு, 2.5 கோடி ரூபாய் தமிழ்மொழி ரீமேக் உரிமைக்கான கட்டணமாக ரகசியமாக செட்டில் செய்யப்படிருபதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் நமக்கு கிடைத்தன.
சாரா (நிலா)- தெய்வதிருமகளில் கலக்கலாக நடித்து பலத்த பாராட்டு பெற்ற குழந்தை நட்சத்திரம் - பட கலெரி தீக்ஷா சேத் - புதுப்படங்கள்வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடும் குடும்பத்திரைக்காவியம் - தெய்வத்திருமகள் - சிறப்புக்காட்சி - நிகழ்வு - படங்கள்Gallery - Category: Kriti kharbanda - telugu actree Cute beauti - stills 2011சீனா சஹபாடி - நடிகை - படங்கள் சிங்கம் - ஹிந்தி வால்பேப்பர்ஸ் - படங்கள் பூஜா சோப்ரா - படங்கள்Gallery - Category: Money money more money telugu movie stills 2011
இயக்குனர் விஜய் மதராஸபட்டினம் படத்தை டைட்டானிக் படத்தை தழுவி எடுக்காமல், அதன் பாதிப்பில் மட்டுமே வேறு கதைக்களம் காலகட்டம் என்று படத்தை உருவாக்கிக்கினார். இதனால் டைட்டானிக் காப்பி என்ற குற்றச்சாட்டு எடுபடாமல் போய் விட்டது.
ஆனால் இம்முறை விஜயால் அப்படி திறமையாக செயல்பட முடியவில்லை. கடந்த 2001 –ஆம் ஆண்டு, ஹாலிவுட்டின் நியூ லைன் சினிமா தாயாரிப்பில், ஹாலிவூட்டின் முன்னாள் நவீன நாடக நடிகையும், திரைக்கதை எழுதாளரும், ஜெஸ்ஸி நெல்சன் இயக்கி ஆறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துறைக்கப்பட்ட படம்தான் 'ஐ யம் சாம்’. ‘ஸ்டெப் மாம்’ ‘தி ஸ்டோரி ஆஃப் அஸ்’ உட்பட மொத்தம் நான்கு படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், ஐ யம் சாம் உலகப் பட விழாக்களில் கலக்கிய படம். உலக அளவிலும் பல விருதுகளை குவித்த படம்.
இந்தப்படத்தின் கதையமைப்பு, முக்கிய கதாபாத்திரங்கள் உட்பட அப்படியே இயக்குனர் விஜய் பயன்படுத்தியது, தெய்வத்திருமகள் படத்தை ‘ஐ யம் சாமின்’ தமிழ் ரீமேக் போலவே ஆனதுதுதான் சிக்கலை உண்டு பண்ணி விட்டது. படம் போஸ் புரடெக்‌ஷனில் இருந்தபொதே, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த சிவில் வழ்க்கறிஞரைப் பிடித்த நியூ லைன் சினிமா, அவர் மூலம் யூ டிவிக்கு படம் கைமாறும் முன்பே “ எங்கள் படமான ஐ யம் சாமை ‘ பிரதி எடுத்த படம் என்று கேள்விப்ப்ட்டோம். படத்தை திரையிடும் முன் எங்களுக்கு போட்டுக் காட்டி, ஆட்சேபனை இல்லை என்றால் மட்டுமே நீங்கள் சென்சார் சன்றிதழ் பெறவேண்டும்” இல்லையென்றால் சென்னை உயர்நீதிமன்ரத்தில் வழக்கு தொடருவோம் என்று சொல்ல, மோகன் நடராஜான் யூ.டிவியிடம் பிரச்சனனையைச் சொல்லி படத்தை விற்று விட, பிறகு நியூ லைன் சினிமாவின் வழ்க்கறிங்கறை சமாதானத்துக்கு அழைத்ததாம் யூடிவி.
தமிழ்நாட்டின் வியாபார விஷயங்களை பற்றி பஞ்சப்பட்டு பாடிய யூடிவி, நீங்கள் கேட்கிற இழப்பீடு எல்லாம் தர முடியாது வேண்டுமானால் 50 லட்சம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றதாம். ஆனால் நியூ லைன் சினிமா பிரநிதிகள் படத்தை பார்த்த பிறகு 5 கோடிக்கு குறைந்து ஆகாது நாங்கள் கோர்ட்டில் பார்த்துகொள்கிறோம் என்று அடம்பிடிக்க தற்போது படம் வெளியாகும் பத்து நாட்களுக்கு முன்பு, வேறு வழியில்லாமல் 2.5 கோடியை இழப்பீடாக கொடுத்திருகிறார்கள்.
இந்த விவகாரம் சில முன்னனி ஊடகங்களுக்கு கசிந்தும், இந்த படத்தின் விளம்பரத்தை கொடுத்து அவர்களது வாயையை அடித்து விட்டது யூடிவி என்கிறார்கள். இந்த சம்பவத்தின் மூலம் உலகப்படங்களையும், ஹாலிவுட் படங்களையும் திருடி தமிழ்படுத்தி வந்த தமிழ் இயக்குனர்கள், இனி ஒருபோதும் அப்படி செய்யவேண்டிய அவசியமில்லை. முறையாக  ரைட்ஸ் வாங்கியே ரீமேக் செய்யலாம். அதில் எந்த அவமானமும் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்!Thanks to Tamil Media....