Friday, 30 September 2011

பெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள்


அய்யாவின் தாடி ரகசியம்

ஒரு நாள் இரவு அய்யாவின் வீட்டு மாடியில் அவரது நண்பர்கள் அய்யா தாடி வளர்ப்பது ஏன் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முக அழகுக்காக தாடி வளர்ப்பதாக என்னிடம் அய்யா சொன்னார் என்றார் மாயவரம் நடராசன். எஸ்.வி.லிங்கமோ, இல்லையில்லை ரஷ்ய அறிஞர்கள் எல்லோரும் தாடி வைத்துள்ளனர். அவர்களைப் பார்த்தபின் வைத்தேன் என்று என்னிடம் கூறினார் என்றார். உடனே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், சவரச் செலவு தினமும் நாலணா மிச்சமாகிறது என்றாரே என்னிடம் என்றதும், பட்டுக்கோட்டை அழகிரி, கொஞ்ச நேரம் என்றாலும் இன்னொரு வரிடம் தலைகுனிந்து உட்காருவது தன்மானக் கேடாக உள்ளது என்றாரே என்னிடம் என்றார்.
மேடைஏறி பலரைத் தாக்கித் திட்டும்போது, போனால் போகிறான் கிழவன், வயதானவன் என்று விட்டுவிடுவார்கள் என்று என்னிடம் கூறினாரே என்றார் பூவாளூர் பொன் னம்பலனார். அப்போது கி.ஆ.பெ.விசுவநாதம், தூங்குங்கள் நாளை உங்களுக்கு உண்மையான காரணத்தை அய்யாவிடமே கேட்டுச் சொல்கிறேன் என்றார்.
மறுநாள் அய்யாவிடம் தாடியின் ரகசியம் கேட்டுவிட்டு, தினமும் பத்து நிமிடம் வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே. பல நல்ல காரியங்களை இந்த நேரத்தில் செய்யலாமே என்று நினைத்து விட்டேன். தானாக வளர்ந்துவிட்டது. வேறெதுவும் காரணம் இல்லை என்று அய்யா கூறியதாக அனைவரிடமும் கூறினார். அப்போது கருகுடி சின்னையா பிள்ளை, இன்னும் யார் யாரிடம் என்னென்ன காரணங்கள் சொல்லியுள்ளாரோ அதையும் கேட்டு அனைவரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றதும் அனைவரும் சிரித்துவிட்டனர்.
ஒருமுறை ரயில் நிலையத்திலிருந்து வந்தபோது எதிரில் வந்த ஒருவர் அய்யாவைப் பார்த்து, நீங்கள் ஏன் தாடி வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, எனக்கு பிளேடு செலவு மிச்சம், உனக்கு என்ன நஷ்டம் என்று கூறியுள்ளார்.

தமிழிசை ராஜா அண்ணாமலை (செட்டியாரும்), ஆர்.கே. சண்முகம் (செட்டியாரும்) தமிழிசை இயக்கம் தொடங்கி அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். பல லட்சம் செலவு செய்தனர். வீண் விரயம் செய்வதைக் கண்டித்து அய்யா கூட்டத்தில் பேசினார்.
மருமகனுக்குப் பல் தேய்க்க சோம்பேறித்தனம். பல் தேய்க்கும்படி மருமகனிடம் சொல்ல வெட்கப்பட்டார் மாமியார். ஒரு யுக்தி தோன்றியது மாமியாருக்கு. கரும்பு மென்று தின்றால் பல் சுத்தமாகுமே என்று நினைத்து, மாப்பிள்ள இந்த ஊர்க் கரும்பு ரொம்ப ருசியாக இருக்கும். ஒரு பணத்துக்குக் கரும்பு வாங்கிச் சாப்பிடுங்கள் என்று கூறி பணமும் கொடுத்து அனுப்பினார். மாப்பிள்ளையோ பணத்தை வாங்கி எள்ளுப் புண்ணாக்கு வாங்கித் தின்றுவிட்டு பல்லை மேலும் கேவலமாக்கி வந்து நின்றார். மாமியாருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இதுபோலல்லவா இந்தத் தமிழிசைக் கிளர்ச்சியும் ஆகியுள்ளது. தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவு உணர்வு தோன்றிவிடுமானால் தமிழிசை தானாக வளர்ந்துவிடும் என்றார்.


(தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து)

பெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள்

பெரியோர் என்று பல மாமனிதர்களைச் சொல்வதுண்டு. ஆனால் பெரியார் என்றால், மூடப் பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமுதாய சமத்துவம் காணப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களை மட்டுமே அடையாளம் காட்டி நிற்கும் சொல்லாகத் திகழ்கிறது.. அத்தகு பெருமைபெற்ற நம் அய்யா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளுள் சில:



அய்யாவின் அறிவாற்றல்
கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அய்யா சொற்பொழிவாற்றினார். மொழிபெயர்ப்புப் பணிக்காக நமது உண்மை ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் உடன் சென்றிருந்தார். இயல்பிலேயே தன்னம்பிக்கையினை அதிகமாகப் பெற்ற அய்யா அவர்கள் எதையும் தாமே செய்து பார்ப்போம் என்ற ஆர்வம் கொண்டவர்.
கான்பூர் மாநாட்டினை முடித்துவிட்டு லக்னோ சென்று பேசச் சென்றார். ஆங்கிலத்தில் பேச முயன்றார். ஆசிரிருக்கோ வியப்பு. பேசும் இடமோ பல்கலைக்கழகம், அய்யா படித்ததோ மூன்றாம் வகுப்புவரை மட்டுமே. எனினும், அறிவு ஆசான் துணிச்சலுடன் பேச நினைத்தார்.
ஒரு சிறிய முன்னேற்பாட்டின்படி பேசத் தொடங்கினார். அதாவது, அய்யா ஆங்கிலத்தில் பேசுவார். அய்யாவுக்குப் பேசும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியர் அந்த வார்த்தையினை எடுத்துக்கொடுத்து சரிசெய்ய வேண்டும். அய்யாவின் விருப்பப்படி ஆசிரியர் தயார்நிலையில் இருந்தார்.
அய்யா பேசத் தொடங்கினார். பேசிக்கொண்டிருந்தபோது அடுப்பு எனும் பொருளை உணர்த்தும் ஆங்கிலச் சொல்லினைச் சொல்ல வேண்டும். அது அவரது நினைவுக்கு உடனே வரவில்லை. பேச்சு தடைப்பட்டது. ஆசிரியரைப் பார்த்தார். அவசரத்தில் ஆசிரியருக்கும் அந்த வார்த்தை நினைவில் வராததால் ஆசிரியர் சிறிதுநேரம் யோசித்தபோது, அய்யா ஓவன் (Owen) என்னும் ஆங்கிலச் சொல்லினைக் கூறி பேச்சைத் தொடர்ந்து ஆசிரியரை மட்டுமின்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் (Appropriate Word) சரியான சொல்லையே தேர்வு செய்து பேசினார். லக்னோ பல்கலைக்கழகத்தில் அய்யா பேசிய பேச்சுத் திறமையும் நுண்ணறிவும் பாராட்டுக்குரியதே. அய்யா அவர்கள் கருத்தைத்தான் பார்த்தார். அதற்குத்தான் முன்னுரிமை கொடுத்தார்.

(தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து)

Thursday, 22 September 2011

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?


இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் 

திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. 

திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண்பெண் ஆகியோர் பிறந்த

நட்சத்திரம்ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான 

பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது.

 இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே 

திருமணம் செய்து வைக்கப்படுகிறது. 

இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று 

அந்தத் திருமணம்தவிர்க்கப்படுகிறது.

ஜாதகத்தின் வழியில் பார்க்கப்படும் அந்தப்பொருத்தங்கள்




1. தினப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட
தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம்
மற்றவை சுபம்.


2. கணப் பொருத்தம்


தேவ கணம்

அசுவினிமிருகசீரிஷம்புனர்பூசம்பூசம்அஸ்தம்,
சுவாதிஅனுஷம்திருவோணம்ரேவதி


மனித கணம்

பரணிரோகிணிதிருவாதிரைபூராடம்பூரட்டாதி,
உத்தரம்உத்ராடம்உத்ரட்டாதி


ராட்சஷ கணம்

கார்த்திகைமகம்விசாகம்சதயம்ஆயில்யம்,
 அவிட்டம்சித்திரைகேட்டைமூலம்.

பெண்ணும்மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர)
இருந்தால் நலம்.
 (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)
பெண் தேவ கணமும்புருஷன் மனித கணமானால் மத்திமம்.
பெண் தேவ கணமும்புருஷன் ராட்சஷ கணமானால் அதமம்
(தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் மனித கணமும்புருஷன் ராட்சஷ கணமானால்  அதமம்-
பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)
பெண் ராட்சஷ கணமும்புருஷன் மனித கணமானால் பொருந்தாது.


3. மாகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)

பெண் நட்சத்திர முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13,
16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.


4. ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)
பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை
13 க்கு மேல் இருந்தால் சுபம்.
 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.



5. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)


ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு.
பெண்ஆண் நட்சத்திரங்கள்பெண்ணுக்குப் பெண் யோனியாகவும்,
ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம்.
இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.


அசுவினி - ஆண் குதிரை


பரணி - ஆண் யானை

கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை


திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை

பூசம் - ஆண் ஆடு


ஆயில்யம் - ஆண் பூனை

மகம் - ஆண் எலி


பூரம் - பெண் எலி

உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி

சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி

அனுஷம் - பெண் மான்

கேட்டை - கலைமான்

மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பச (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.)

திருவோணம் - பெண் குரங்கு

அவிட்டம் - பெண் சிங்கம்

சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்

உத்திரட்டாதி - பாற்பசு

ரேவதி - பெண் யானை
-
 இவற்றில்


பாம்பு கீரி
யானை சிங்கம்
குரங்கு ஆடு
மான் நாய்
எலி பூனை
குதிரை எருமை
பசு புலி

-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்




                                           7. ராசி அதிபதி
கிரகம்
  நட்பு
சமம்
பகை
சூரியன்
சந்செவ்குரு
 புதன்
 சுக்சனி,ராகுகேது
சந்திரன்
சூரிபுத  
செவ்குரு,சுக்சனி
ராகுகேது
செவ்வாய்
சூரிசந்குரு
சுக்சனி
புதன்ராகு,கேது
புதன்
சூரிசுக்
செவ்குரு,சனிராகு,கேது
சந்
குரு
 சூரிசந்செவ்
சனிராகு,கேது
புதன்சுக்
சுக்கிரன்
புதசனிராகு,கேது
செவ்குரு
சூரிசந்
 
சனி
புதசுக்ராகு,கேது
குரு
சூரிசந்,செவ்
ராகுகேது
சனிசுக்
புதகுரு
சூரிசந்,செவ்

ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.
ஒருவருக்கு சமம்ஒருவருக்கு நட்பானால் உத்தமம்
ஒருவருக்கு பகைஒருவருக்கு நட்பானால் மத்திமம்
ஒருவருக்கு சமம்ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை
இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை

 
8. வசியப் பொருத்தம்


பெண் ராசி            பையன் ராசி

மேஷம்               சிம்மம்விருச்சிகம்


ரிஷபம்               கடகம்துலாம்

மிதுனம்              கன்னி
கடகம்                விருச்சிகம்தனுசு

சிம்மம்               மகரம்
கன்னி                ரிஷபம்மீனம்

துலாம்               மகரம்
விருச்சிகம்           கடகம்கன்னி

தனுசு                மீனம்
மகரம்               கும்பம்

கும்பம்               மீனம்

மீனம்                மகரம்

வசியம் பொருத்தமுடையவை. 

மற்ற ராசிகள் பொருந்தாது. 

6. ராசிப் பொருத்தம்

பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்
6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
8-வது ராசி ஆகாது.
7-வது ராசியானால் சுபம்.
அதிலும் கும்பம்- சிம்மம்மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது.
2, 6, 8, 12 ஆகாது.
1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.
பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் 

சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும்.
 இது மிகவும் தீமையாகும்
. இதிலும் சில விதிவிலக்குண்டு.
அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.


அனுகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசி                                      பிள்ளை ராசி

   
மேஷம்    ------ ---------------            கன்னி

    
தனுசு    -----------------------              ரிஷபம்


   
துலாம்  ----------------------         மீனம்
கும்பம்    ------------------------          கடகம்

  
சிம்மம்    ----------------------           மகரம்

  
மிதுனம்  ----------------------          விருச்சிகம்

-
ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது

ரஜ்ஜீ பொருத்தம்  (மிக முக்கியமானது


ரஜ்ஜீ ஐந்து வகைப்படும். 


சிரோ ரஜ்ஜீ

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்



கண்ட ரஜ்ஜ

ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோஹனம்

திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோஹனம்



உதார ரஜ்ஜீ

கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி 
- அவரோஹனம்


ஊரு ரஜ்ஜீ

பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்



பாத ரஜ்ஜீ

அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்

ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்



பெண்,பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவாக இல்லாமல்

பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்

ஒரே ரஜ்ஜீவில் ஆரோஹனம், அவரோஹனம் என்று இரு பிரிவுகள்

உண்டு.

சிலர் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவில் இருந்தாலும்,

ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம்

என்கிறார்கள்


10. வேதைப் பொருத்தம்

அசுவினி - கேட்டை

பரணி - அனுஷம்

கார்த்திகை - விசாகம்

ரோகிணி - சுவாதி

திருவாதிரை - திருவோணம்

புனர் பூசம் - உத்ராடம்

பூசம் - பூராடம்

ஆயில்யம் - மூலம்

மகம் - ரேவதி

பூரம் - உத்ரட்டாதி

உத்திரம் - உத்ரட்டாதி

அஸ்தம் - சதயம்

11. நாடிப் பொருத்தம்

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.


பார்சுவநாடி (அ) வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம்,

கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி


மத்தியா நாடி (அ) பித்த நாடி

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம்,

பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி


சமான நாடி (அ) சிலேத்தும நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி,

விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி
ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால்

நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.


12. விருக்ஷம்

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால்

புத்திர பாக்கியம் உண்டு.


பால் இல்லாதது


கார்த்திகை - அத்தி

ரோகிணி - நாவல்

பூசம் - அரசு

ஆயில்யம் - புன்னை

மகம் - ஆல்

பூரம் - பலா

உத்தரம் - அலரி

அஸ்தம் - வேலம்

கேட்டை - பிராய்

மூலம் - மா

பூராடம் - வஞ்சி

உத்ராடம் - பலா

திருவோணம் - எருக்கு

 பூரட்டாதி     - தேமா

ரேவதி -இலுப்பை


பால் உள்ளது


அசுவினி - எட்டி

பரணி - நெல்லி

மிருகசீரிஷம் - கருங்காலி

திருவாதிரை - செங்கருங்காலி

புனர்பூசம் - மூங்கில்

சித்திரை - வில்வம்

சுவாதி - மருதம்

விசாகம் - விளா

அனுஷம் - மகிழ்

அவிட்டம் - வன்னி

சதயம் - கடம்பு

உத்ரட்டாதி - வேம்பு



பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால் என்ன செய்வது?

மகேந்திரம் இருந்தால் செய்யலாம்.

மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் 

ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராய்ந்து 

பின்பு சேர்க்கலாம்.

இந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜீ 

இருந்தால் திருமணத்தைத் தாராளமாகச் செய்யலாம்.



சில சோதிடர்கள் இந்தப் பன்னிரண்டு பொருத்தங்களில் 

பத்துப் பொருத்தம் பார்த்தால் போதும் என்கின்றனர். 

சோதிடர்கள் இல்லாமலே, தாங்களே மணமகள், மணமகன்

ஆகியோரின் நட்சத்திரம், ராசி ஆகியவைகளைக் கொண்டு 

பத்துப்பொருத்தங்களை இந்த இணையதளம் மூலம் அறிந்து 

கொள்ளலாம்.