Friday, 30 September 2011

பெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள்

பெரியோர் என்று பல மாமனிதர்களைச் சொல்வதுண்டு. ஆனால் பெரியார் என்றால், மூடப் பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமுதாய சமத்துவம் காணப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களை மட்டுமே அடையாளம் காட்டி நிற்கும் சொல்லாகத் திகழ்கிறது.. அத்தகு பெருமைபெற்ற நம் அய்யா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளுள் சில:அய்யாவின் அறிவாற்றல்
கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அய்யா சொற்பொழிவாற்றினார். மொழிபெயர்ப்புப் பணிக்காக நமது உண்மை ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் உடன் சென்றிருந்தார். இயல்பிலேயே தன்னம்பிக்கையினை அதிகமாகப் பெற்ற அய்யா அவர்கள் எதையும் தாமே செய்து பார்ப்போம் என்ற ஆர்வம் கொண்டவர்.
கான்பூர் மாநாட்டினை முடித்துவிட்டு லக்னோ சென்று பேசச் சென்றார். ஆங்கிலத்தில் பேச முயன்றார். ஆசிரிருக்கோ வியப்பு. பேசும் இடமோ பல்கலைக்கழகம், அய்யா படித்ததோ மூன்றாம் வகுப்புவரை மட்டுமே. எனினும், அறிவு ஆசான் துணிச்சலுடன் பேச நினைத்தார்.
ஒரு சிறிய முன்னேற்பாட்டின்படி பேசத் தொடங்கினார். அதாவது, அய்யா ஆங்கிலத்தில் பேசுவார். அய்யாவுக்குப் பேசும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியர் அந்த வார்த்தையினை எடுத்துக்கொடுத்து சரிசெய்ய வேண்டும். அய்யாவின் விருப்பப்படி ஆசிரியர் தயார்நிலையில் இருந்தார்.
அய்யா பேசத் தொடங்கினார். பேசிக்கொண்டிருந்தபோது அடுப்பு எனும் பொருளை உணர்த்தும் ஆங்கிலச் சொல்லினைச் சொல்ல வேண்டும். அது அவரது நினைவுக்கு உடனே வரவில்லை. பேச்சு தடைப்பட்டது. ஆசிரியரைப் பார்த்தார். அவசரத்தில் ஆசிரியருக்கும் அந்த வார்த்தை நினைவில் வராததால் ஆசிரியர் சிறிதுநேரம் யோசித்தபோது, அய்யா ஓவன் (Owen) என்னும் ஆங்கிலச் சொல்லினைக் கூறி பேச்சைத் தொடர்ந்து ஆசிரியரை மட்டுமின்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் (Appropriate Word) சரியான சொல்லையே தேர்வு செய்து பேசினார். லக்னோ பல்கலைக்கழகத்தில் அய்யா பேசிய பேச்சுத் திறமையும் நுண்ணறிவும் பாராட்டுக்குரியதே. அய்யா அவர்கள் கருத்தைத்தான் பார்த்தார். அதற்குத்தான் முன்னுரிமை கொடுத்தார்.

(தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து)

1 comment:

 1. சாதியும் மதமும் சமயுமும் காணா
  ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

  சாதியும் மதமும் சமயமும் பொய்யென
  ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

  நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
  நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

  அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
  வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
  வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
  யாதெனில் ..
  சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
  சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
  சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
  சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
  சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .

  உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
  கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
  கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
  கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
  காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
  பிள்ளை விளையாட்டு ....

  குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
  அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.

  See this site :
  http://www.vallalyaar.com/

  ReplyDelete