எங்கும் செல்ல இயலாதவர்கள்,நடமாட இயலாத முதியவர்கள், வறுமையில் வாடுபவர்கள் வீட்டில் திருவிளக்கை மாலை 5.30க்குள் ஏற்றி அதன்பின்னால் ஒரு நிலைக்கண்ணாடி வைக்க வேண்டும்.திருவிளக்கு குத்துவிளக்காக இருக்கலாம்;காமாட்சி விளக்காகவும் இருக்கலாம்;
அந்த நிலைக்கண்ணாடியில் தெரியும் ஒளியை ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து பார்க்க வேண்டும்.
விளக்கிற்கும்,பயிற்சி செய்பவருக்கும் உள்ள இடைவெளி 5 அடி தூரம் இருக்க வேண்டும்.விளக்கு தீபம் நம் புருவ மத்திக்கு எதிர் கோட்டில் இருக்க வேண்டும்.கண்ணாடியில் உள்ள தீபஒளியைப் பார்த்து அமைதியாக சாந்தமாக,
அருட்பெருஞ்சோதி,அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என தினமும் 27 தடவை மனதால் ஜெபிக்க வேண்டும்.90 தினங்களில் தீப ஒளி உங்களுக்கு ஒரு வழிகாட்டும்.இந்த 90 நாட்களும் அதன்பிறகும் அசைவம்,மது ஒதுக்கிவிடவேண்டும்.அப்படி செய்தால்தான்,பலன் கிடைக்கும்.
இந்த வழிமுறையை நமக்கு அறிமுகப்படுத்திய ஆன்மீக ஆராய்ச்சியாளர்,நமது மானசீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!!!
இதுபோன்ற பல நூதன ஆன்மீக வழிபாட்டு முறைகளை அறிய பின்வரும் முகவரிக்கு ரூ.1000/-அனுப்பவும்.அப்படி அனுப்பினால்,இந்த அறக்கட்டளையிலிருந்து வெளியிடப்படும் அனைத்து ஆன்மீகப் புத்தகங்களும் நமது வீட்டுக்கு அவ்வப்போது அஞ்சலில் வரும்.
முதலில் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக வாழ்க்கையின் தொகுப்பாகிய ஆன்மீகப்பயணம் இரண்டு பாகங்கள் நமக்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்த அறக்கட்டளையை மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஆரம்பித்தார்கள்.மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவர்கள்,சூட்சும ஆன்மீக ஆராய்ச்சி செய்பவர்கள்,ஜோதிடர்கள்,எல்லோருக்கும் நல்லது செய்ய நினைப்பவர்கள்,தியானம் செய்பவர்கள்,கோவில் நிர்வாகம் செய்பவர்களுக்கு இந்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.
மிஸ்டிக் இந்தியா மிஷன்,
1,முதல் மெயின் ரோடு,ஜெயராம் நகர்,கொளத்தூர்,சென்னை-99.
ஐயா எனக்கு ஆன்மீகப்பயணம் புத்தகம் வேண்டும் தயவுகூர்ந்து மிஷனின் போன் நம்பர் கிடைக்குமா?
ReplyDeleteஎனக்கு தங்கள் ஃபோன் நமநம்பர் வேண்டும். நன்றி
Delete