மகாலட்சுமியுடன் திருப்பாற்கடலில் தோன்றியது சங்கு.கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வலம்புரிச்சங்கு ஓங்காரஒலியெழுப்பும்.சாதாரணச் சங்கில் ஓம்கார ஒலி உள்ளடங்கியிருக்கும்.சங்கொலி துர் ஆவிகளை விரட்டும்.சங்குப்பக்கம் துர் ஆவிகள் வராது.அதனால்,குழந்தைகளுக்குக் கூட சங்கில் பால் ஊற்றிப்புகட்டுவர்.
மனித மண்டை ஒட்டுப்பூஜையும்,சங்குப்பூஜையும் ஒன்றுதான்.மண்டைஓடு காளிக்குரியது.இது சத்ரு சம்ஹாரம் செய்யும். சங்கு லட்சுமிக்குரியது.சங்கு பூஜை செய்து வந்தால்,தன ஆகர்ஷணம் (பண வரவு பல மடங்கு அதிகரித்தல்) ஆகும்.
சங்கு காயத்ரி மூலம் பிற உலகத்துடன் சூட்சுமத் தொடர்பு கொண்டுள்ளனர்.இப்போதும்,தமிழ்நாட்டில் மிகச் சில இடங்களில் இந்தத் தொடர்பு இருக்கிறது.சங்கினைப் பயன்படுத்தாத நேரத்தில்,வெள்ளிப்பாத்திரத்தில்,சுத்தமான நீரில் மூழ்க வைத்திருக்க வேண்டும்.உபயோகிக்கும்போது அதை எடுத்து,தூயதுணியினால் நன்கு துடைத்துவிட்டு,அதற்கு சாம்பிராணிபுகைக் காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் முற்காலத்தில் துறவிகள் கர்ண எட்சிணி மற்றும் கர்ண பைரவர் மந்திரங்களை ஜபித்துள்ளனர்.அது துறவிகளின் உடற்கூறைப்பொறுத்து வலது காதிலோ அல்லது இடது காதிலோ முக்காலமும் உரைக்கும்.
மனதால் கேள்வி கேட்க,கேட்க, பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.
வடநாட்டில் சப்தாகர்ஷிணி என்னும் பெண் தேவதை மந்திரம்சொல்லி அருள்வாக்கு,ஜோதிடம்,கைரேகை,பிரசன்னம் என பல தொழில் செய்கின்றனர்.சப்தாகர்ஷிணிக்கு ரூபம் கிடையாது.மந்திரம் மட்டும் உண்டு.அடிக்கடி பால் சாதம் ,வாழைப்பழம் சாப்பிட்டு வர சித்தியாகும்.காதில் கனகபுஷ்பராகம் கடுக்கண் அணிவது ஒரு பிளஸ்பாய்ண்ட்,பழைய வித்வத்கள் அனைவரும் கடுக்கண் அணிவர்.இதற்குத்தான்.
நமது உடலை மந்திர உடலாக மாற்றிட வேண்டும்.மனம் விருப்பு வெறுப்பின்றி இருந்தால்தான் செய்திகளை தூய மனதில் எளிதில் பெறலாம்.ஒரு லட்சம் தடவை சப்தாகர்ஷிணி மந்திரம் ஜபிக்க வேண்டும்.பின்,உங்களின் கைக்கு அடக்கமான வெண்மையான சங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் குரு அம்சம் எனில் வலதுகாதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும்,நீங்கள் சுக்கிர அம்சம் எனில் இடது காதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும்,அந்த ஒரு லட்சத்துக்கு மேல் ஜபித்து வர வேண்டும்.சங்கின் கீழ்ப்பகுதியி காதின் கீழ் மடலில் பொருத்தப்பிடித்துக் கொள்ள வேண்டும்.சங்கில் நல்லதேவதை தான் பேசும்.
சப்தாகர்ஷிணி மந்திரம்:
ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய
சப்தாகர்ஷணி ஆகர்ஷய ஆகர்ஷய
வா வா ஸ்வாஹா
இந்தப் பயிற்சியை 21 வயது நிரம்பியவர்கள் தான் செய்ய வேண்டும்.எந்த மதத்தைச் சேர்ந்தவரும் செய்யலாம்.பெண்கள் மாதஓய்வு நாட்களில் 5 நாட்கள் நிறுத்தவும்.அனைவரும் அசைவம்,மது நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும்.இந்தப்பயிற்சிக்கு தனி அறை அவசியம்.இயலாவிட்டால்,அந்த வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் மது,மாமிசம்,முட்டை தொடக்கூடாது.இது கட்டாயம்!!!
ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்!!!
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment