Friday, 8 July 2011
பத்மனாப சுவாமி கோயில் 6-வது அறையைத் திறக்கத் தடை
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் கடைசி ரகசிய அறையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும் இதுகுறித்து கேரள அரசு மற்றும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தினர் ஆலோசனை சுப்ரீம் கோர்ட்டு வரவேற்கிறது.
ரகசிய அறைகளில் ஆய்வுப் பணி மேற்கொண்டு வரும் 7 பேர் கொண்ட குழு ஊடகங்களுக்கு தகவல் பறிமாற கூடாது என்றும் கூறியுள்ளது.
கோவிலில் உள்ள 6-வது அறை பற்றி மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பாதாள அறைக்குள்ளும் பல லட்சம் கோடி மதிப்புள்ள நகை குவியல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட இரும்பு கதவுகளுடன் கூடிய அந்த அறையை திறப்பது கடும் சவாலாக உள்ளது.
6-வது அறையை திறப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என்ற தகவலும் பரவி உள்ளது. இதற்கிடையே பத்மநாப சுவாமி கோவில் நகை பொக்கிஷத்தை கையகப்படுத்தும் வகையில் கோவில் நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கேரள அரசு தீர்மானித்துள்ளது.
இதை எதிர்த்து திருவாங்கூர் மன்னர் குடும் பத்தை சேர்ந்த இளவரசர் ராஜமார்த் தாண்டவர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரவீந்திரன், பட்நாயக் முன்னிலையில் நடந்தது. அப்போது பத்மநாப சுவாமி கோவில் 6-வது பாதாள அறையை திறக்க நீதிபதிகள் தடை விதித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment