உடல் இளைக்க பெருக்க என்ன செய்ய வேண்டும்?
இவர்களுக்கு நான் ஒரு சூத்திரத்தை சொல்ல போகிறேன். அதை பின் பற்றினால் நினைத்தது நடக்கும்.
இளைக்க சூத்திரம்: புளிப்பு தன்மையுள்ள பொருட்களை அதிகமாக உண்ணுங்கள். உடல் இளைக்கும்.
வேறு என்ன வழிகள்:
௧. சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்துங்கள்.
௨. உடற் பயிற்சி நடை பயற்சி செய்வதாக இருந்தால் சாப்பிட்ட பின்பு சில மணி நேரங்கள் கழித்து செய்யுங்கள்.
௩.சாப்பிடும் பொழுது பசி இருக்கும் பொழுதே நிறுத்திக் கொள்ளுங்கள். (இது ரொம்ப முக்கியம்).
௪. சாப்பிட்டு விட்டு உறங்கவோ உட்காரவோ செய்யாதீர்கள்...சிறிது நடத்தல் நலம்
பெருக்க சூத்திரம்: இனிப்பு தன்மையுள்ள பொருட்களை நிறைய உண்ணுங்கள். உடல் பெருக்கும்.
வேறு என்ன வழிகள்:
௧.உடற் பயிற்சி நடை பயிற்சிக்கு பிறகு உணவருந்துங்கள்.
௨. பசியெடுத்த பின்பு உண்ணுங்கள்.
௩. சாப்பிட்டுவிட்டு உறங்குங்கள் (உடல் பெருக்கும்.. ஆனால் நீண்ட ஆயுளுக்கு நல்லதல்ல)
இருவருக்கும் பொது: நிறைய நீர் அருந்துங்கள்.
ஏதோ நான் நினைத்ததையும் ஏற்கனவே படித்தையும் எழுதியுள்ளேன். உங்களுக்கு சரி வந்தால் செய்யுங்கள். எதையும் அளவுக்கு மீறி உண்டால் நஞ்சு என்பதையும் மனதில் வையுங்கள்.
No comments:
Post a Comment