Saturday, 16 July 2011

யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் ?

இன்றைய நிலையில் பல பேர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். அனைவருக்கும் ஆன்மீக அனுபவம் ஏற்படுமா?.யாருக்கு ஏற்படும் என்று சுட்டிக்காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.
முதலில் யாரால் ஆன்மீக அனுபவம் ஏற்ப்படும் என்று பார்ப்போம்.

ஒன்று. ஆன்மீகத்திற்கு முக்கியமான கோள் கேது - ஏன் எனில் இவனே குண்டலினிக்கு காரகன்.

இரண்டு. ஐந்தாம் வீடு.- ஏன் எனில் இந்த வீடே தியானத்தை குறிக்கும்.
மூன்று. ஐந்தாம் வீட்டின் அதிபதி.
நான்கு. குரு - இவன் சிவனை குறிப்பவன். ஆன்மீகத்திற்கு முக்கியமானவன்.(சிவனின்றி ஏது தியானம்)
ஐந்து - ஐந்தாம் வீட்டில் அமர்ந்த கோள்கள் மற்றும் அதிபதியுடன் சேர்ந்த கோள்கள்.

இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்.
ஆன்மீகத்திற்கு உகந்த சில முக்கிய கோள் நிலைகள் கீழே:

௧.லக்னத்தில் குரு இருப்பத்து மிக சிறப்பு. ஏன் எனில் இங்கே இருக்கும் குரு ஐந்தாம் வீட்டை பார்க்கிறான் மற்றும் குருவிற்குரிய ஒன்பதாம் வீட்டை பார்கிறான். அதுமட்டுமல்ல அவன் ஐந்து, ஒன்பது மற்றும் பதினொன்றாம் வீடுகளில் இருப்பதும் சிறப்பே ஆகும். ஏன் எனில் இங்கிருந்தும் அவன் ஐந்தாம் வீட்டை பார்க்கிறான். இங்கே இருக்கும் குரு கேது மற்றும் ஐந்தாம் வீட்டு அதிபதியை பார்த்தல் இன்னும் நலம்.

௨. கேது ஐந்தாம் வீட்டில் இருத்தல், ஐந்தாம் வீட்டு அதிபதியின் நட்சத்திரத்தில் இருத்தல் அல்லது குருவின் நட்சத்திரத்தில் இருத்தல், ஐந்தாம் வீடு அதிபதியுடன் இணைந்த்திருத்தல், குருவின் பார்வை பெற்றிருத்தல்.
௩. ஐந்தாம் அதிபதி- குரு, கேது ஆகியவைகளுடன், சேர்க்கை அல்லது பார்வை அல்லது நட்சத்திர தொடர்பு கொண்டிருத்தல்.
(இன்னும் நிறைய சொல்லலாம்)

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில்
யாருடைய ஜாதகத்தில் கேது,ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் குரு - இவர்களுக்குள் சம்பந்தம் இருக்கிறதோ இவர்களுக்கு "தியான"ஆன்மீக அனுபவம் ஏற்ப்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
இங்கே சம்பந்தம் என்பது இணைவு, பார்வை, நட்சத்திர அமர்வு ஆகியவற்றை குறிக்கும். (பரிவர்த்தனை கூட இருக்கலாம்...வேறு ஏதேனும் சம்பந்தம் இருந்தாலும் சேர்த்துக்குங்க)

No comments:

Post a Comment