Wednesday, 20 July 2011

தெய்வத்திருமகள் மறைக்கப்பட்ட வழக்கு!


விக்ரம் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் படம் தெய்வத்திருமகள். இந்த படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜனிடமிருந்து படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கி
தற்போது சட்ட ரீதியாக அந்தபடத்தின் தயாரிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராக இருக்கும் யூடிவி மீது ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான நியூ லைன் சினிமா, இந்தியப்பணத்துக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தமது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் ஊடகத்தின் காதுகளை எட்டாமல் மறைக்கப்பட்டு, 2.5 கோடி ரூபாய் தமிழ்மொழி ரீமேக் உரிமைக்கான கட்டணமாக ரகசியமாக செட்டில் செய்யப்படிருபதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் நமக்கு கிடைத்தன.
சாரா (நிலா)- தெய்வதிருமகளில் கலக்கலாக நடித்து பலத்த பாராட்டு பெற்ற குழந்தை நட்சத்திரம் - பட கலெரி தீக்ஷா சேத் - புதுப்படங்கள்வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடும் குடும்பத்திரைக்காவியம் - தெய்வத்திருமகள் - சிறப்புக்காட்சி - நிகழ்வு - படங்கள்Gallery - Category: Kriti kharbanda - telugu actree Cute beauti - stills 2011சீனா சஹபாடி - நடிகை - படங்கள் சிங்கம் - ஹிந்தி வால்பேப்பர்ஸ் - படங்கள் பூஜா சோப்ரா - படங்கள்Gallery - Category: Money money more money telugu movie stills 2011
இயக்குனர் விஜய் மதராஸபட்டினம் படத்தை டைட்டானிக் படத்தை தழுவி எடுக்காமல், அதன் பாதிப்பில் மட்டுமே வேறு கதைக்களம் காலகட்டம் என்று படத்தை உருவாக்கிக்கினார். இதனால் டைட்டானிக் காப்பி என்ற குற்றச்சாட்டு எடுபடாமல் போய் விட்டது.
ஆனால் இம்முறை விஜயால் அப்படி திறமையாக செயல்பட முடியவில்லை. கடந்த 2001 –ஆம் ஆண்டு, ஹாலிவுட்டின் நியூ லைன் சினிமா தாயாரிப்பில், ஹாலிவூட்டின் முன்னாள் நவீன நாடக நடிகையும், திரைக்கதை எழுதாளரும், ஜெஸ்ஸி நெல்சன் இயக்கி ஆறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துறைக்கப்பட்ட படம்தான் 'ஐ யம் சாம்’. ‘ஸ்டெப் மாம்’ ‘தி ஸ்டோரி ஆஃப் அஸ்’ உட்பட மொத்தம் நான்கு படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், ஐ யம் சாம் உலகப் பட விழாக்களில் கலக்கிய படம். உலக அளவிலும் பல விருதுகளை குவித்த படம்.
இந்தப்படத்தின் கதையமைப்பு, முக்கிய கதாபாத்திரங்கள் உட்பட அப்படியே இயக்குனர் விஜய் பயன்படுத்தியது, தெய்வத்திருமகள் படத்தை ‘ஐ யம் சாமின்’ தமிழ் ரீமேக் போலவே ஆனதுதுதான் சிக்கலை உண்டு பண்ணி விட்டது. படம் போஸ் புரடெக்‌ஷனில் இருந்தபொதே, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த சிவில் வழ்க்கறிஞரைப் பிடித்த நியூ லைன் சினிமா, அவர் மூலம் யூ டிவிக்கு படம் கைமாறும் முன்பே “ எங்கள் படமான ஐ யம் சாமை ‘ பிரதி எடுத்த படம் என்று கேள்விப்ப்ட்டோம். படத்தை திரையிடும் முன் எங்களுக்கு போட்டுக் காட்டி, ஆட்சேபனை இல்லை என்றால் மட்டுமே நீங்கள் சென்சார் சன்றிதழ் பெறவேண்டும்” இல்லையென்றால் சென்னை உயர்நீதிமன்ரத்தில் வழக்கு தொடருவோம் என்று சொல்ல, மோகன் நடராஜான் யூ.டிவியிடம் பிரச்சனனையைச் சொல்லி படத்தை விற்று விட, பிறகு நியூ லைன் சினிமாவின் வழ்க்கறிங்கறை சமாதானத்துக்கு அழைத்ததாம் யூடிவி.
தமிழ்நாட்டின் வியாபார விஷயங்களை பற்றி பஞ்சப்பட்டு பாடிய யூடிவி, நீங்கள் கேட்கிற இழப்பீடு எல்லாம் தர முடியாது வேண்டுமானால் 50 லட்சம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றதாம். ஆனால் நியூ லைன் சினிமா பிரநிதிகள் படத்தை பார்த்த பிறகு 5 கோடிக்கு குறைந்து ஆகாது நாங்கள் கோர்ட்டில் பார்த்துகொள்கிறோம் என்று அடம்பிடிக்க தற்போது படம் வெளியாகும் பத்து நாட்களுக்கு முன்பு, வேறு வழியில்லாமல் 2.5 கோடியை இழப்பீடாக கொடுத்திருகிறார்கள்.
இந்த விவகாரம் சில முன்னனி ஊடகங்களுக்கு கசிந்தும், இந்த படத்தின் விளம்பரத்தை கொடுத்து அவர்களது வாயையை அடித்து விட்டது யூடிவி என்கிறார்கள். இந்த சம்பவத்தின் மூலம் உலகப்படங்களையும், ஹாலிவுட் படங்களையும் திருடி தமிழ்படுத்தி வந்த தமிழ் இயக்குனர்கள், இனி ஒருபோதும் அப்படி செய்யவேண்டிய அவசியமில்லை. முறையாக  ரைட்ஸ் வாங்கியே ரீமேக் செய்யலாம். அதில் எந்த அவமானமும் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்!



Thanks to Tamil Media....

1 comment: